கைத்தொலைபேசியின் ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபார...
News
கைத்தொலைபேசியின் ஊடாக நுணுக்கமாக ஐஸ் போதைப்பொருள் வியாபாரம்: சந்தேகநபர் ஒருவர் கைது!
சாய்ந்தமருது மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாகக் கைத்தொலைபேசி ஊடாகக் குறுஞ்செய்திகளை அனுப்பி ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் சாய்ந்தமருது பொலிஸாரால் சனிக்கிழமை (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று மாவடிப்பள்ளிப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது பகுதி நோக்கி வன் வீதி ஊடாக மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் கடத்தப்பட்ட போது குறித்த 35 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசி ஊடாக மின்னல் வேகத்தில் குறுஞ்செய்திகளைப் பரிமாறி, மிகவும் நுணுக்கமான முறையில் இச்சட்டவிரோத வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதான சந்தேகநபரைச் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை இன்று(18) சாய்ந்தமருது பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(பாறுக் ஷிஹான்)