New Updates! Fresh news just arrived.

பொதுப் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ; சாரதிகளுக்கு திடீர...

News

பொதுப் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ; சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை

August 11, 2026 10:40 am
பொதுப் போக்குவரத்தில் அதிரடி மாற்றம் ; சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை
பொதுப் போக்குவரத்துச் சேவையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கில், சாரதிகள் உள்ளிட்டோருக்கு மேற்கொள்ளப்படும் திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து வசதிகளையும் கொண்ட மேலும் ஒரு நடமாடும் மருத்துவ பேருந்து சுகாதார அமைச்சினால் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நேற்று (10) சுகாதார அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விசேட வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் கிளிஃபர்ட் பெரேராவிடம் பேருந்து கையளிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான இருவருட மூலோபாயத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் சாரதி உதவியாளர்கள் திடீர் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

தற்போது இந்தத் திட்டம் நாட்டின் ஐந்து மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிதாக வழங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ பேருந்தின் உதவியுடன், தேவையான மனித மற்றும் பௌதிக வளங்களை அதிகரித்து, நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் இந்தப் பரிசோதனை நடவடிக்கையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய திட்டத்தின் கீழ் இதுவரை 7,150 போதைப்பொருள் பாவனை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவையில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதன் மூலம், வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்களை குறைப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now