New Updates! Fresh news just arrived.

பசுபிக் கடலில் திடீர் மாற்றம் - நாசா எச்சரிக்கை!

News

பசுபிக் கடலில் திடீர் மாற்றம் - நாசா எச்சரிக்கை!

October 21, 2026 8:18 pm
பசுபிக் கடலில் திடீர் மாற்றம் - நாசா எச்சரிக்கை!
நாசாவின் செயற்கை கோள்கள் பசுபிக் பெருங்கடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க எல் நினோ நிகழ்வைக் கண்காணித்துள்ளன. இதனால் கடல் வெப்ப நிலை உயர்ந்ததோடு, காலநிலை மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன.

விண்வெளி நிறுவனமான நாசாவின் புவி கண்காணிப்பு செயற்கை கோள்கள், பசுபிக் பெருங்கடலில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க எல் நினோ நிகழ்வைக் கண்காணித்துள்ளன.

இந்த இயற்கையின் நிகழ்வு, சூரிய கிரகணத்தை விடவும் மிகவும் அரிதானது என்று விஞ்ஞானிகள் மேலும் தெறிவிக்கின்றனர்.

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் NOAA-வின் கூற்றுப்படி, இது 1950 க்குப் பிறகு மிகவும் வலிமையான எல் நினோவாக மாறுவதற்கு 83 சதவீதமான வாய்ப்புள்ளது என எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
ஏற்கனவே உலகெங்கிலும் உள்ள விவசாயிகளும் கடலோர சமூகத்தினரும் இப்பருவகால மாற்றத்தின் நேரடித் தாக்கத்தினை உணரத் தொடங்கியுள்ளனர்.

பூமத்திய ரேகை பசுபிக் பெருங்கடலில் நீரின் வெப்பநிலை இயல்பை விட கணிசமாக உயர்ந்தும் உள்ளது. நாசாவின் மேம்பட்ட செயற்கை கோள்கள், இந்த முழு அமைப்பிலும் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் விண்வெளியில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. காற்றின் திசையும் மாறியுள்ளதால் கடல் மட்டமும் பருவகால சுழற்சியும் முற்றிலும் சீர்குலைந்து உள்ளன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எல் நினோவை நாசாவின் செயற்கை கோள்கள் முதன் முதலில் 2026 ஜனவரியில் கண்டறிந்தன.

மைக்ரோனேசியாவிற்கு அன்மையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் வெப்ப நீரின் பெருக்கம் காணப்பட்டுகின்றது.

இவை ஆயிரக்கணக்கான மைல்கள் நீளமுள்ள, மெதுவாக நகரக்கூடிய நீருக்கடியில் உள்ள அலைகளாகும். அதனால் விஞ்ஞானிகள் இதற்கு கெல்வின் அலை என்றும் பெயரிட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now