New Updates! Fresh news just arrived.

மோப்ப நாய்களின் உதவியுடன் திடீர் சோதனை நடவடிக்கை தீவிரம்!...

News

மோப்ப நாய்களின் உதவியுடன் திடீர் சோதனை நடவடிக்கை தீவிரம்!

June 9, 2026 3:25 pm
மோப்ப நாய்களின் உதவியுடன் திடீர் சோதனை நடவடிக்கை தீவிரம்!
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஆரம்பம் தொடக்கம் இன்று வரை திடீர் சோதனைகளானது முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி தொடக்கம் 6 மணி வரைக்கும் இடம்பெற்றன.

போதைப்பொருள் கடத்தப்படுவதினை தடுப்பதற்காக இவ்வாறான சோதனைகளானது நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தினுடைய சாய்ந்தமருது, கல்முனை, காரைதீவு மற்றும் நிந்தவூர், அக்கரைப்பற்று பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்டிருந்த குறித்த சோதனை நடவடிக்கைகளில் பொலிஸ் மோப்ப நாய்கள் பங்கேற்றதோடு, குறிப்பாக அதிகாலை வேளைகளில் நெடுந்தூர சேவையில் கொழும்பில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு வருகின்ற பேருந்துகளும் பயணிகளும் இதன்போது சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

அத்தோடு, அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனை நடவடிக்கையில் கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அம்பாறை மாவட்டம் 1-இன் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார மேற்பார்வையில் சவளக்கடை பக்கியெல்ல மற்றும் தமண பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தலைமையிலான பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், குறித்த நடவடிக்கையானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அம்பாறை மாவட்டத்தினுடைய பகுதிகளுக்கு பிற மாகாணங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதினை தடுக்க இவ்வாறான திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now