New Updates! Fresh news just arrived.

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்...

News

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா செய்கை அறுவடை!

August 8, 2026 1:30 pm
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கறுவா செய்கை அறுவடை!
கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் நடராசா சிவகுமார் என்பவரது குரு அக்ரோ பாமில் பயிரிடப்பட்ட நான்கு ஏக்கர் கறுவா அறுவடை விழா நேற்று மாலை நடைபெற்றது.

முருகானந்தா கல்லூரி முதல்வர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.சோதிலட்சுமி கலந்து கொண்டார்.

மேலும், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் (பொறியியல்) ந.சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கை.பிரகாஸ், கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம், விவசாய பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள், ரொட்டறிக் கழக உறுப்பினர்கள்,பிரதேச விவசாயிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now