New Updates! Fresh news just arrived.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீ...

News

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

June 18, 2026 1:22 pm
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் (CID) அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சம்பளம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now