New Updates! Fresh news just arrived.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கி...

News

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

August 11, 2026 9:18 pm
பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், இறக்காமம் பிரதேசத்தின் விவசாய மற்றும் மீனவ உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில், பெறுமதியான மீன்பிடி வலைகள், மண்வெட்டிகள், கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பம்ப் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம். முஸ்மி தலைமையில் நேற்று(10) நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய பிரதித் தேசிய அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.எஸ். உதுமாலெப்பையினுடைய பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் அன்றாட விவசாய மற்றும் மீனவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கும் நலிவுற்ற விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உதவும் வகையில், இறக்காம பிரதேச மீனவர்களுக்காக ரூபா 05 இலட்சம், வரிப்பத்தான்சேனை பிரதேச விவசாயிகளுக்காக ரூபா 05 இலட்சம், குடுவில் பிரதேச மீனவர்களுக்காக ரூபா 04 இலட்சம் மொத்தமாக இறக்காம பிரதேச பிரிவுக்குட்பட்ட ரூபா 14 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இந்த முதற்கட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பயனாளிகளான விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ. அன்சார், இறக்காமம் பிரதேச சபையின் உறுப்பினர்களான முன்னாள் உப தவிசாளர் என்.எம். ஆஷிக், எம்.என். நாசர், எஸ்.எல்.எம். றஜா, மீனவர் சங்கத் தலைவர் என். நிஸ்வி, பலநோக்கு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐ. நஜீமா உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், உள்ளூர் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now