New Updates! Fresh news just arrived.

நாவிதன்வெளி விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபா செலவில் மண்வெட்...

News

நாவிதன்வெளி விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபா செலவில் மண்வெட்டிகள் வழங்கி வைப்பு

July 5, 2026 11:34 pm
நாவிதன்வெளி விவசாயிகளுக்கு 5 இலட்சம் ரூபா செலவில் மண்வெட்டிகள் வழங்கி வைப்பு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பிரதேசத்தின் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாவிதன்வெளி பகுதியில் பெறுமதியான மண்வெட்டிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர எம்.எஸ். உதுமாலெப்பையினுடைய பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிச் சூழலில் தங்களின் அன்றாட விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வரும் நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையிலேயே ஐந்து இலட்சம் ரூபாய் (500,000) நிதியொதுக்கீட்டில் இந்த முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாவிதன்வெளி மத்திய குழு அமைப்பாளர் அல்ஹாஜ் நஸார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விநியோக நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.ஏ. அன்சார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உபகரணங்களை விவசாயிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் மற்றும் பயனாளிகளான உள்ளூர் விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கே எ ஹமிட்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now