New Updates! Fresh news just arrived.

அட்டாளைச்சேனை இக்றா வித்தியாலயத்திற்கு 43,000 ரூபா பெறுமத...

News

அட்டாளைச்சேனை இக்றா வித்தியாலயத்திற்கு 43,000 ரூபா பெறுமதியான மின்விசிறிகள் வழங்கல்!

June 20, 2026 2:56 pm
அட்டாளைச்சேனை இக்றா வித்தியாலயத்திற்கு 43,000 ரூபா பெறுமதியான மின்விசிறிகள் வழங்கல்!
அட்டாளைச்சேனை இக்றா வித்தியாலயத்தின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில் 43,000 ரூபா பெறுமதியான மூன்று மேல்மாடி மின்விசிறிகள் (Ceiling Fans) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க (SDC) உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த மாதம் பாடசாலையில் கள ஆய்வுப் பயணம் மேற்கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் அவர்களின் JP Foundation அமைப்பின் ஊடாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

மின்விசிறிகள் கையளிக்கும் நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர்களான A.R.M. றிப்கான், S. றனீஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு, அவற்றை பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

மாணவர்களுக்கு சுகமான மற்றும் உகந்த கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த உதவி, கல்வித் துறைக்கான சமூகப் பங்களிப்பின் சிறந்த முன்னுதாரணமாகப் பாராட்டப்படுகிறது.

பாடசாலையின் அவசரத் தேவையை உணர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்து உதவிய பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் மற்றும் JP Foundation அமைப்பினருக்கு பாடசாலை சமூகம் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now