New Updates! Fresh news just arrived.

மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி!

News

மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி!

February 2, 2026 6:11 pm
மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ காப்புறுதி!
நாட்டின் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களுக்கு ‘சுரக்ஷா’ (Suraksha) காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளினை வழங்குவதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினுடைய வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனமானது இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு, வெள்ளம், சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள், 2025.11.26 தொடக்கம் 2025.12.31 வரையான காலப்பகுதியில் எதிர்கொண்ட சம்பவங்களுக்கான இழப்பீட்டு கோரிக்கைகள் மட்டுமே இங்கு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சலுகைகள்: பெற்றோரினை இழந்த மாணவர்களுக்கு: அனர்த்தம் காரணமாகப் பெற்றோரை அல்லது சட்டரீதியான பாதுகாவலர்களினை இழந்த மாணவர்களுக்கு, வருமான எல்லைகளைக் கருத்திற் கொள்ளாமல் நன்மைகள் வழங்கப்படும். (இதற்கு அனர்த்தத்தினால் பெற்றோர் உயிரிழந்ததினை உறுதிப்படுத்தும் ஆவணங்களினை சமர்ப்பிக்க வேண்டும்).

சிகிச்சைக்கான சலுகை: காப்புறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும், அனர்த்தம் காரணமாக ஏற்பட்டுள்ள விபத்துகளுக்காக நேரடியாகப் பெறப்பட்ட சிகிச்சைகள், மருந்து கொள்வனவுகள் மற்றும் பரிசோதனைக் கட்டணங்களுக்காக 20,000.00 ரூபா வரை வெளிவாரி சிகிச்சை நன்மைகள் வழங்கப்படும்.

ஆவணங்கள் சேதமடைந்திருந்திருந்தால்: 2025.11.01 தொடக்கம் 2025.11.26 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற சம்பவங்களுக்கான காப்புறுதி ஆவணங்கள் அனர்த்தத்தினால் சேதமடைந்திருந்தால், அதிபர் மற்றும் கிராம உத்தியோகத்தரினுடைய பரிந்துரையின் பேரில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தனியார் வைத்தியசாலை: பற்றுச்சீட்டுகள் சேதமடைந்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட நகல்களினை சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு வைத்தியசாலை: சிகிச்சை விபரத் துண்டுகள் (Diagnosis Card) சேதமடைந்திருக்குமானால், வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட நோயாளியினுடைய விபரங்கள் அடங்கிய மருத்துவப் பரிந்துரைக் கடிதத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

கால அவகாசம் நீடிப்பு: அனர்த்தம் காரணமாக விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு, தற்போதுள்ள 90 நாட்கள் கால அவகாசத்தோடு, மேலதிகமாக 60 நாட்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 150 நாட்கள் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. (இது 2025.11.01 தொடக்கம் 2025.12.31 வரையான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்துகின்றது).

ஆவணங்களினை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தினை இன்சூரன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்த முடியாத பட்சத்தில், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினுடைய உறுதிப்படுத்தல் கடிதத்தினை கோருவதற்கு நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now