சுரேஷ் சலேவின் தடுப்பு காவல் உத்தரவு நீடிப்பு!
News

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையினுடைய முன்னாள் பணிப்பாளரான சுரேஷ் சலே தொடர்பான வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.
அவரைத் தடுத்து வைக்கக் காவலில் வைத்திருக்குமாறும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் சுரேஷ் சலே இன்று (20) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, சுரேஷ் சலே கடந்த பெப்ரவரி மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினுடைய காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.