சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகர்குற்றப் புலனாய்வுத் திணைக்களத்...
News
சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகர்குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கடிதம்!
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலேயின் சட்ட ஆலோசகரான அசித் சிறிவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சுரேஷ் சலேயின் உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதால், அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக வைத்தியசாலை ஒன்றில் அனுமதிப்பது அவசியமாகிறது என அந்த சட்டத்தரணி அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தகுதிவாய்ந்த மற்றும் சுயாதீனமான மருத்துவ நிபுணர்கள் மூலம் சுரேஷ் சலேவிற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், முழுமையான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை வழங்கக்கூடிய பொருத்தமான வைத்தியசாலைக்கு அவரை அவசரமாக மாற்றுவது அவசியம் என்றும் சட்டத்தரணி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்குத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சுரேஷ் சலே தனது இறுதி உயில் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, தனது சட்டத்தரணியைச் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரேஷ் சலேயின் இந்த அறிக்கைகளும் தற்போதைய சூழ்நிலைகளும் அவரது உடல் மற்றும் மனநிலை கடுமையாகப் பின்தங்கியுள்ளதைத் தெளிவாகக் காட்டுவதாகவும், தனது நலன், ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்து பகுத்தறிவுடன் முடிவெடுக்கும் திறன் அவருக்கு இனி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சட்டத்தரணி, தற்போது அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சூழல் அவரது வாழ்க்கைக்கு கடுமையான மற்றும் உடனடி ஆபத்தை உருவாக்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி, இக்கருத்துகளைக் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தனது கட்சிக்காரருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய நீதிமன்ற, குற்றவியல், அரசியலமைப்பு அல்லது சர்வதேச சட்டக் நடவடிக்கைகளின் போது இக்கடிதம் ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் என்றும் பணிப்பாளருக்குத் தெரிவித்துள்ளார்.