New Updates! Fresh news just arrived.

சுரேஷ் சலேவின் மனு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

News

சுரேஷ் சலேவின் மனு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

June 3, 2026 2:43 pm
சுரேஷ் சலேவின் மனு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் நாளை (04) காரணிகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இன்று குறித்த வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில் மூன்றாவது சந்தேகநபராக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now