New Updates! Fresh news just arrived.

பெண்ணொருவருக்கு நெஞ்சுக்குப் பதிலாக அக்குளில் சத்திரசிகச்...

News

பெண்ணொருவருக்கு நெஞ்சுக்குப் பதிலாக அக்குளில் சத்திரசிகச்சை!

August 20, 2026 4:40 pm
பெண்ணொருவருக்கு நெஞ்சுக்குப் பதிலாக அக்குளில் சத்திரசிகச்சை!
நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக்குள் பகுதியில் சத்திரசிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதி யைச் சேர்ந்த அந்தப் பெண் நெஞ்சுப் பகுதியில் இருந்த கொழுப்புக் கட்டிக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் சத்திரசிகிச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற இடத்திலேயே அவருக்கு அக்குள் பகுதியில் சத்திரசி கிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண்ணுக்குத் தவறுதலாக அறுவைச் சிகிச்சை செய் யப்பட்டுள்ளது என்பதை அவதானித்த மருத்துவ நிபுணர்கள் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சை யாக உருவெடுத்த நிலையில் பாதிக்கப் பட்ட தரப்பினர் தமக்கு நீதிகோரி தெல் லிப்பழை பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கச் சென்றவிடத்து, அந்த முறைப்பாட்டை ஏற்பதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் நீதி யைப் பெறுவதற்கு அவர்கள் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த மருத்துவ நிபுணர் இதற்கு முன் னரும் இவ்வாறாகத் தவறான முறை யில் சத்திர சிகிச்சைகளை செய்திருந்தார் என்பதும், அது பெரியளவில் சர்ச்சையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now