கல்முனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை- 32 மோட்...
News
கல்முனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை- 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சோதனை நடவடிக்கையானது கடந்த வெள்ளிக்கிழமை(28) இரவு முதல் இன்று (29) வரை கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த திடீர் சோதனை நடவடிக்கையில் கல்முனை, சவளைக்கடை பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து கொண்டதோடு, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்தோடு, தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இச்சோதனை நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிள்கள் கட்டங் கட்டமாக பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதுடன், வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரால் வழங்கப்பட்டன.
மேலும், மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவுமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது மற்றும் தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.
அத்தோடு, இவ் விசேட சோதனை நடவடிக்கையில் 75 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் ஆபத்து விளைவிக்கும் நோக்குடன் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதலல் உள்ளிட்ட 117 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதேவேளை, பொதுப்போக்குவரத்து சட்டங்களினை மீறும் நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையானது எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(பாறுக் ஷிஹான்)