New Updates! Fresh news just arrived.

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்த நாயை துன்புறுத...

News

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்த நாயை துன்புறுத்திய சந்தேக நபர் கைது!

June 27, 2026 11:08 pm
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் பயணித்த நாயை துன்புறுத்திய சந்தேக நபர் கைது!
கதிர்காம பாதயாத்திரை அடியார்களோடு வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரினை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைதானது மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 21 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நாய் யாழிலிருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் பயணித்து வரும் சுப்பிரமணியன் எனும் பெயருடைய நாயாகும்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று கல்முனை பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபரினால் தாக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயலாகும் என்று இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சுமார் 450 கிலோ மீற்றர் தூரம் பயணித்துள்ள குறித்த சுப்பிரமணியன் எனும் நாய் தாக்கப்பட்டமை சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கண்டங்களினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now