New Updates! Fresh news just arrived.

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் க...

News

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

October 10, 2026 1:03 pm
பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!
பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்ஹல மாவத்தையிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவரை, ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினால் நேற்று (09) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, கடந்த மாதம் 4ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால், குறித்த வீட்டில் தங்கி இருந்த 74 வயதுடைய நபர் மீது கைத்துப்பாக்கியினால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

குறித்த தாக்குதலினால் பலத்த காயத்திக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த நிலையில்,இச்சசைம்பவம் குறித்து விசாரணைகளினை மேற்கொண்ட ஹோமாகம பிராந்திய குற்றவியல் விசாரணை பணியகத்தினுடைய அதிகாரிகளினால் நேற்று பிற்பகல் மாகும்புர சுதந்திர மாவத்தைக்குத் திரும்பும் சந்திக்கருகில் வைத்து குறித்த சந்தேகநபரினை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு, கைது செய்யப்பட் நபர் கொடகம, ஹோமாகம பகுதியை சேர்ந்த 29 வயதினையுடையவர் எனவும், அவரே குறித்த கொலைக்காக பயன்படுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளினை ஓட்டிச் சென்றுள்ளவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபரினை தற்போது மேல் மாகாணத்தின் தெற்கு குற்றவியல் விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now