சுவசெரிய ஊழியர்களுக்கு 8 வருடங்களாக சம்பள அதிகரிப்பு இல்ல...
News
சுவசெரிய ஊழியர்களுக்கு 8 வருடங்களாக சம்பள அதிகரிப்பு இல்லை
1990 'சுவசெரிய' அவசர அம்பியூலன்ஸ் சேவை ஊழியர்களுக்கு 2018 ஆம் ஆண்டு முதல் இதுவரை எந்தவித சம்பள அதிகரிப்பும் வழங்கப்படவில்லை என அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் சம்பளப் பிரச்சினையின் காரணமாக, இந்தச் சேவையில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் நீண்டகாலமாக சேவையில் நிலைத்திருப்பதில்லை என்பதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு தற்போது அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோப் குழுவின் முன் கருத்துத் தெரிவித்த 'சுவசெரிய' நிதியத்தின் நியமிக்கப்பட்ட பணிப்பாளர், சட்டத்தரணி நலின் பெரேரா, ஊழியர்களுக்கு இன்னமும் 2018 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ஆரம்பச் சம்பளமே கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதன் பின்னர், அமைச்சின் ஊடாக வரவு செலவுத் திட்டத் திணைக்களத்துக்கு அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், அதுவரை தமது ஊழியர்களுக்குச் சம்பளத்தை அதிகரிக்கத் தமக்கு நிதி ஒதுக்கீடு இல்லை எனவும் அவர் மேலும் விளக்கமளித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த 1990 'சுவசெரிய' நிதியத்தின் தலைவர் நிரோஷன் ரத்நாயக்க, புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்து, பயிற்சி அளித்து சேவையில் இணைத்தாலும், அவர்களில் கணிசமானோர் சேவையைக் கைவிட்டுச் செல்வதாகத் தெரிவித்தார்.
நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும் இச்சேவையில் இணைந்து பெற்றுக்கொள்ளும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, உயர் சம்பளத்திற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நோக்கிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சுவசெரிய ஊழியர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சேவையின் பெரும்பாலான அம்பியூலன்ஸ் பொலிஸ் நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளதோடு, சிறிய அளவிலானவை பிரதேச செயலகங்கள் மற்றும் விகாரை வளாகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையங்களிலுள்ள வசதிகள் குறித்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், பொதுவாக அந்த தளங்களில் சில குறைபாடுகள் காணப்படுவதால், பொலிஸாருடன் பேசி அந்தப் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் புதிய ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது இந்த நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி நலின் பெரேரா, இதற்கு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டைக் கோரினார்.
அதற்கமைய, ஆரம்பக் கட்டமாக வருடாந்தம் குறிப்பிட்ட தொகையை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கி, எதிர்வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் சுவசெரிய ஊழியர்களின் தங்குமிட வசதிகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.