New Updates! Fresh news just arrived.

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

News

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

June 5, 2026 10:25 pm
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!
நேற்றிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.

முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீட்டின் கதவினை திறந்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இந்த வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றது.

பின்னர் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now