நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தல்: இலங்கையர் உட்பட ...
News
நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தல்: இலங்கையர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்!
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ள இலங்கையர் உட்பட மூன்று வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள மூவரே இவ்வாறு தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கனடா நாட்டிலுள்ள ஐ.டி நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருரும் சென்னை அசோக் நகரை பூர்வீகமாக கொண்ட ஒருவர். கடந்த 2022 ஆம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் தனது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் குடும்பத்தோடு, சென்னை வந்து இருந்த நிலையில் அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளார்.
இதற்குப்பிறகு அவர் மீண்டும் கனடா நாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு சென்றவேளை அவரது கை விரலில் இருந்த மையை பார்த்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன்போது, அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைக்கு பின்பு தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்படாமையால் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டு போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் குறித்த நபரை கே.கே.நகர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த பொலிஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை பிணையில் விடுவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று இரவு விருகம்பாக்கம் பகுதியினை சேர்ந்த அஸ்திரேலியா நாட்டு குடியுரிமை பெற்றுள்ள ஒருவர் மீண்டும் நாடு திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவரும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டு போட்டுள்ளமை தெரியவந்ததினையடுத்து குடியுரிமை அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவர் மீது விருகம்பாக்கம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளினை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இலங்கை நாட்டு குடியுரிமையினை பெற்றுள்ள ஒருவரும் விமான நிலையம் வந்தபோது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டு போட்டுள்ளமை தெரிய வந்ததினையடுத்து அவர் மீதும் கொடுங்கையூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியின், த.வெ.க. வேட்பாளர்ரான சீனிவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முடிவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே தேர்தலின் போது ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதினால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின்னுடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி என்பது தொடர்பில் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.