New Updates! Fresh news just arrived.

கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக ...

News

கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக மீனவர்களது படகு!

August 6, 2026 4:24 pm
கடல் கொந்தளிப்பு காரணமாக நெடுந்தீவில் கரையொதுங்கிய தமிழக மீனவர்களது படகு!
கடல் கொந்தளிப்பு காராணமாக, தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று, நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில், படகில் இருந்த 11 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழக கடற்தொழிலாளர்களினுடைய படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக, கடற்படையினருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர், குறித்த படகில் இருந்த கடற்தொழிலாளர்களினை மீட்டுள்ளனர்.

படகினை மயிலிட்டி மீன்பிடித்துறைமுக பகுதிக்கு எடுத்துள்ள செல்ல நடவடிக்கை எடுத்துள்ள கடற்படையினர், மீட்கப்பட்ட கடற்தொழிலாளர்களை, கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now