New Updates! Fresh news just arrived.

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி! - Gu...

News

தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026 10:35 pm
தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதி!
தமிழக சி​ரேஷ்ட அமைச்சர் செங்கோட்டையன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் கோவையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்படடிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக கட்சியினுடைய சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் செங்கோட்டையன் அண்மையில் இடம்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தோடு இணைந்தார்.

குறித்த கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பினை செய்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் அவருக்கு நிதியமைச்சு வழங்கப்பட்ட நிலையில் வழங்கப்பட்ட நிதியமைச்சு பதவி மீளப் பெறப்பட்டு, வருவாய் வரித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையிலேயே செங்கோட்டையன் தற்போது காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now