ஆட்சியை நெருங்கும் தமிழக வெற்றிக் கழகம்!
News

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமானது தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியினைப் பதிவு செய்து வருகின்றது.
இதன்படி, மாலை 5 மணி நிலவரப்படி, குறித்த கட்சியானது சுமார் 109 தொகுதிகளில் முன்னிலை வகித்து ஏனைய கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக சென்னை மாவட்டத்திலுள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகின்றது. குறித்த தேர்தலில் கிட்டத்தட்ட தவெக வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலையும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவரான விஜய் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை அவரை வாழ்தியுள்ள ஆதவ் அர்ஜூனா மன்னராட்சி தூக்கி எறியப்பட்ட நாள், ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என பதிவிட்டுள்ளதுடன், மின்சார வெற்றிக்கு வாழ்த்துகள் என இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
விஜய் அண்ணனுக்கு இந்த மாபெரும் வெற்றிக்காக என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். மக்கள் சேவையில் மேலும் உயர்ந்து, எண்ணற்ற சாதனைகள் படைக்க அண்ணனுக்கும் அவரது முழு அணிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.