வாக்குப்பதிவை இரண்டு மணி நேரம் நீட்டிக்கக் கோரிக்கை விடுத...
News
வாக்குப்பதிவை இரண்டு மணி நேரம் நீட்டிக்கக் கோரிக்கை விடுத்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நேரத்தினை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை மற்றும் பிற நகரங்களிலுள்ள தமிழக வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய பேருந்து அல்லது பொது போக்குவரத்து வசதி இல்லாமையினால் தவித்து வருகின்றனர்.
அவர்கள் எல்லோரும் தங்களின் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கான உரிய போக்குவரத்து ஏற்பாட்டினை செய்யும் வகையில் மாநில போக்குவரத்து ஆணையக அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும் வாக்குப்பதிவு செயல்முறை மிகவும் தாமதமாக இருப்பதாகவும் தகவல். அதை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளினுடைய தேர்தல் மேற்பார்வை அதிகாரி பார்வையிட்டு, விரைவு படுத்த வேண்டும்.
மேலும், வாக்குப்பதிவு நேரத்தினை இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும். இது போக்குவரத்து பிரச்சினையில் சிக்கியுள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்துவதற்கான வாய்ப்பினை வழங்கும்.
அந்த வகையில் இரவு 8.00 மணி வரைக்கும் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். குறித்த திருத்தப்பட்ட நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் வாக்கை செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.