மாணவனை மது வாங்க அனுப்பிய ஆசிரியர் கைது!
News

குஜராத்தின் கிர் சோம்நாத் என்ற மாவட்டத்தில், பாடசாலை நேரத்தில் மாணவன் ஒருவனை மதுபானம் வாங்க அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், தொடக்கப் பாடசாலை ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என மாநில கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இச்சம்பவம் ஜூன் 20 ஆம் திகதி காலை சுமார் 8 மணியளவில் உனா தாலுக்காவில் உள்ள கபத் கிராமத்தில் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சர் பிரத்யுமன் வாஜா, இந்த விவகாரம் தீவிரமாக விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மதுபானம் தயாரித்தல் அத்தோடு அதனை விற்பனை செய்தல் மற்றும் அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்போது விசாரணையில் உள்ளார், அத்தோடு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காணொளி செய்தி ஒன்றில் அமைச்சர் தெரிவிக்கையில், "கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுக்காவில் உள்ள கபத் என்ற இடத்தில், பாடசாலை ஆசிரியர் மாணவர் ஒருவரை மதுபானம் வாங்க அனுப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விவகாரத்தை மிகுந்த தீவிரமாக கையாண்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய கல்வி அமைச்சர் பிரத்யுமன் வாஜா, உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அலுவலர் தாமதமின்றி அவரைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை அதிபர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, உனா காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார் என்று வாஜா மேலும் கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஹரேஷ்கிரி குலாப்கிரி கோஸ்வாமி, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பித்து வந்துள்ளார்.
முதல் தகவல் அறிக்கையின்படி, கோஸ்வாமி என்ற 7 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனிடம் 20 ரூபாயை கொடுத்து ஆசை காட்டி, பின்னர் ஒரு பாட்டில் மதுபானமத்தை வாங்கி வருவதற்காக 500 ரூபாய் கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வர் தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.