New Updates! Fresh news just arrived.

சிறுநீர் போகும் அளவிற்கு தாக்கிய ஆசிரியர்: மாணவி வைதியசால...

News

சிறுநீர் போகும் அளவிற்கு தாக்கிய ஆசிரியர்: மாணவி வைதியசாலையில் அனுமதி!

February 6, 2026 1:30 pm
சிறுநீர் போகும் அளவிற்கு தாக்கிய ஆசிரியர்: மாணவி வைதியசாலையில் அனுமதி!
நானுஓயா பாடசாலை ஒன்றில் 8ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவியை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவமொன்று நேற்று (05) இடம்பெற்றுள்ளது

இதன்படி, ஆசிரியர் தேவையற்ற வார்த்தைகளில் கூறி திட்டிய நிலையில் அவ்வாறு கூற வேண்டம் என கூறிய அம் மாணவியை இவ்வாறு தாக்கியதாக பாதிக்கபட்ட மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.

மேலும், குறித்த பாடசாலையில்  கல்வி பயிலும் மாணவியை அதே பாடசாலையை கற்பித்து வரும் ஆசிரியர் ஒருவர் காதில் அறைந்து அவரை அடித்து மேசையில் தள்ளி முதுகில் தடிக்கும் அளவிற்கும் சிறுநீர் போகும் அளவிற்கு தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியை பாடசாலைக்கு அழைத்து சென்று கேட்ட போது அதிபர் விடுமுறை காரணமாக அன்றய தினம் பதில் அதிபராக இருந்த ஆசிரியர் இவ்வாறான சம்பபம் இடம்பெறத்தது போன்று பதில் அளித்துள்ளார் மாணவியை தாக்கிய ஆசிரியரிடம் கேட்ட போது பதிலளிக்காமல் குறித்த பெற்றொரையும் திட்டி உள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளர்

குறித்த சம்பவத்தின் பின்னர் சிகிச்சைக்காக கார்லிபேக் பிரதேச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்து எடுத்து கொண்டு வீடு திறும்பிய பின் மாவணியை அழைத்துக்கொண்டு நானுஓயா காவல் நிலயத்தில் புகர் அளித்துள்ளார்

இந்நிலையில் இன்று காலை மாணவி உடல்நிலை கடும் தலைவலி மற்றும் வைற்று போக்கு காரணமாக அவரை நுவரெலியா பொது வைதியசாலையில் அனுமதிப்பதற்கு அழைத்து சென்றுள்ள நிலையில் பாடசாலை அதிபரிடம் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now