New Updates! Fresh news just arrived.

டெலிகிராம் மோசடி – 38 வயது பெண் கைது!

News

டெலிகிராம் மோசடி – 38 வயது பெண் கைது!

September 19, 2026 9:15 am
டெலிகிராம் மோசடி – 38 வயது பெண் கைது!
டெலிகிராம் குழுவை பயன்படுத்தி இணையவழி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் ஒருவர் படுவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையவழி வியாபாரம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 542,877 ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும், அதில் 66,999 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் படுவத்தை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 பெப்ரவரி 10ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now