அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்திற்க...
News
அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையில் தொலைபேசி உரையாடல்!
அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் விஜித ஹேரத்திற்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, 'IRIS Dena' கப்பலில் இருந்த மாலுமிகளினை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அக்கப்பலினுடைய பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களினை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியினை தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஈரான் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களினை சுட்டிக்காட்டியதோடு, 'IRIS Dena' கப்பல் மீதான தாக்குதலானது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட "முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்" எனவும் இதன்போது குறிப்பிட்டார்.
இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனிவா உடன்படிக்கைகளினை கடுமையாக மீறும் செயலாகும் என்றும், குறித்த குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும் அவர் வலியுறுத்தியதோடு, மேலும், இதற்குப் பொறுப்பான குற்றவாளிகளினை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளினையும் ஈரான் பயன்படுத்தும் என்றும் அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, அமைச்சர்களான அரக்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.