New Updates! Fresh news just arrived.

'Tell IGP' சேவை 24 மணி நேரமும் விரிவுபடுத்தப்பட...

News

'Tell IGP' சேவை 24 மணி நேரமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது– பொலிஸார்.

June 29, 2026 10:36 am
'Tell IGP' சேவை 24 மணி நேரமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது– பொலிஸார்.
பொதுமக்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றும் நோக்குடன், 'பொலிஸ் மா அதிபரிடம் தெரிவிக்கும் (Tell IGP) என்ற விசேட திட்டம் 2026 ஆம் ஆண்டில் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மறுசீரமைக்கப்பட்டு, பொதுமக்களின் வசதிக்கு ஏற்ப விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
24 மணித்தியாலமும் இயங்கி வரும் இச்சேவை மையம்,
கொழும்பு 2 இல் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தின் பிரதான காரியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பிரஜைகள் மாத்திரமன்றி, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் அத்தோடு இலங்கையில் ஏதேனும் ஒரு பொலிஸ் பிரிவின் சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகளும் நிகழ்நிலை மூலமாகத் தங்களின் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்.

முழுமையாக நிகழ்நிலையில் இயங்கும் இச்சேவையினைப் பொதுமக்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று, நாட்டில் உள்ள ஒருவரோ அல்லது வெளிநாட்டுப் பிரஜை ஒருவரோ தங்களின் பெயரைக் குறிப்பிட்டோ அல்லது பெயர் குறிப்பிடாமலோ மிக முக்கியமான மற்றும் இரகசியமான தகவல்களை இத்திட்டத்தின் ஊடாக பொலிஸாருக்கு வழங்க முடியும். குறிப்பாக, மேழும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மூலம் நாட்டினுள் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழு செயல்பாடுகள் குறித்து வழங்கப்படும் தகவல்களை வரவேற்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரான எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now