New Updates! Fresh news just arrived.

நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடத் தற்காலிகத் தடை - Gu...

News

நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடத் தற்காலிகத் தடை

November 19, 2026 9:09 am
நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடத் தற்காலிகத் தடை
இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள 'நில்திய பொக்குன' பகுதியைப் பார்வையிடுவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு மீண்டும் உத்தியோகபூர்வமாக மற்றும் முறையாக ஆரம்பிக்கப்படும் வரை, அப்பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உரிய அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளை நில்திய பொக்குன பகுதியைப் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்வதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உரிய அனுமதிப்பத்திரம் இன்றியும், திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் பங்குபற்றல் இன்றியும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக எந்தவொரு சுற்றுலாப் பயணியையும் அப்பகுதிக்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள நில்திய பொக்குன பகுதியில், முறையான அரச ஒழுங்குமுறை பொறிமுறையின் கீழ் சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக உரிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now