New Updates! Fresh news just arrived.

சாமரவின் வெளிநாட்டுப் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு! - Gu...

News

சாமரவின் வெளிநாட்டுப் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு!

May 18, 2026 7:24 pm
சாமரவின் வெளிநாட்டுப் பயணத் தடைக்கு தற்காலிக தளர்வு!
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்தி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (18) மனு ஒன்றின் மூலம் அழைக்கப்பட்ட நிலையில், பிரதிவாதி சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, பிரதிவாதிக்கு வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த வெளிநாட்டுப் பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அந்த மாகாண சபைக்காக எழுதப்பட்ட காசோலை ஒன்றை தனது தனிப்பட்ட கணக்கில் வைப்புச் செய்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்துள்ளார் எனக் குற்றம் சுமத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now