விளையாட்டு மைதானத்தில் தற்காலிக குடியிருப்புகள் – விளையாட...
News
விளையாட்டு மைதானத்தில் தற்காலிக குடியிருப்புகள் – விளையாட்டு நடவடிக்கைகள் பாதிப்பு
நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில், மாநகர சபையினால் பராமரிக்கப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் கீழ்ப் பகுதியில், யுனிக்விவ் குடியிருப்பு மக்களுக்காக தற்காலிக லயன் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு, அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு தங்கியுள்ள மக்களின் பிரதான தேவைகளில் ஒன்றாக குடிநீர் காணப்படுகின்ற நிலையில், மாநகர சபையினால் அவர்களுக்கு நீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நீரைச் சேமித்து வைப்பதற்கான கொள்கலன்கள் பிரதான விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை அவர்களுக்கான நீரை நிரப்புவதற்காக நுவரெலியா மாநகர சபையின் நீர்தாங்கி வாகனங்கள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு கொள்கலன்களில் நிரப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு அணிகளால் பயன்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி சேதமடைந்து, மிக மோசமான நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, விளையாட்டு மைதானத்தின் ஓரப் பகுதியில் ஓட்டப்பந்தயப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், தற்போதைய நிலை விளையாட்டு வீரர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதுடன், நகரின் முக்கிய விளையாட்டு மைதானத்தின் பயன்பாடும் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள நுவரெலியா மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.