மெகசின் சிறைச்சாலையில் கைதிகளால் பதற்றம்
News

நேற்று (06) இரவு பொறளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு சுமார் 10.20 மணியளவில் சிறைச்சாலையின் ‘E’ பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்று திடீரென அங்கிருந்து வெளியேறி குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து அழைக்கப்பட்டு, சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டிருந்த பதற்றநிலை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்