நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம்: சிறை அதிகாரிகள் உ...
News
நீர்கொழும்பு சிறையில் மீண்டும் பதற்றம்: சிறை அதிகாரிகள் உட்பட ஐவர் பலி
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இன்று (06) முற்பகல் மீண்டும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்புகள் 5 ஆக உயர்ந்துள்ளன.
அதிகாரப்பூர்வ தகவலின்படி, உயிரிழந்தவர்களில் மூவர் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று (05) ஏற்பட்ட முதற்கட்ட மோதலில் இருவர் உயிரிழந்திருந்த நிலையில், இன்று ஏற்பட்ட தொடர் கலவரத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் விளக்கமறியல் கைதிகள் குழுவுக்கும் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த வன்முறையின் தொடக்கமாகும். அந்த சம்பவத்தில் 38 கைதிகள் காயமடைந்திருந்தனர்.
இன்று காலை நிலைமை மீண்டும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேலும் 35 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த சிறைச்சாலை சூழல் இன்று மீண்டும் சீர்குலைந்துள்ளது.
நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக சிறைச்சாலை வளாகத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சிறைச்சாலை சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.