New Updates! Fresh news just arrived.

தனியார் பேருந்து சேவைகளை 50% குறைக்கப்படும்: தனியார் பேரு...

News

தனியார் பேருந்து சேவைகளை 50% குறைக்கப்படும்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

June 7, 2026 3:58 pm
தனியார் பேருந்து சேவைகளை 50% குறைக்கப்படும்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள  எச்சரிக்கை!
தற்போது இலங்கையில் நிலவுகின்ற பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயங்களின் காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை 50% தினால் குறைக்கத் தீர்மானித்திருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினுடைய தலைவர் கெமுனு விஜேரத்ன, நுகேகொடையில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நிலையில் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளை நட்டத்தோடு தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளினை மாற்றி, பயண முறைகளினை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரைக்கும் எந்தவிதமான பதிலும் வழங்கவில்லை.

இம்மாதத்தின் இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு வருடாந்த பேருந்து கட்டணத்தின் திருத்தம் மேற்கொள்ளப்படுமானால் பேருந்து கட்டணங்களானது 20% தொடக்கம் 25% வரைக்கும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

"ஏற்கனவே 25% பேருந்துகளானது சேவையில் ஈடுபடவில்லை. எமது சங்கத்தினை சேர்ந்த சில பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் அடிக்கப்படுகின்றது. அவற்றை நிறுத்தக் கூறியும் அவர்கள் கேட்பதில்லை, அத்வ்வாறான பேருந்துகள் மாத்திரமே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன." என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேழும், 8 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது பேருந்து சேவைகளை 50% மாக மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும், இதனால் பொதுமக்களுக்கு ஒருபோதும் எந்த வித நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினுடைய தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now