ரூ. 4.94 கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் தச்சர் கைது! - Gur...
News
ரூ. 4.94 கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் தச்சர் கைது!
சுமார் 4 கோடியே 94 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'கொக்கேய்ன்' போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 64 வயதுடைய தென் கொரிய நாட்டு தச்சர் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (01) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தவறவிட்ட தனது பயணப் பையைப் பொறுப்பேற்பதற்காக வந்தபோதே, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடந்த 26 ஆம் திகதி குறித்த போதைப்பொருள் தொகையுடன் சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) விமான நிலையத்திலிருந்து டுபாய் சென்று, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளார்.
இருப்பினும், அவர் பயணித்த விமானத்தில் போதைப்பொருள் அடங்கிய பயணப்பை கொண்டு வரப்பட்டிருக்கவில்லை. பின்னர் வேறு ஒரு விமானத்தின் மூலமே அந்தப் பயணப்பை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இரகசிய உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.