2002ஆம் ஆண்டு பாராளுமன்றப் பகிஷ்கரிப்பு; பலரும் அறியாத அர...
News
2002ஆம் ஆண்டு பாராளுமன்றப் பகிஷ்கரிப்பு; பலரும் அறியாத அரசியல் பின்னணிகளை வெளிப்படுத்திய "இரட்டை குழல் துப்பாக்கி" ஆவணத் திரைப்படம் வெளியீடு!
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த 2002ஆம் ஆண்டு பாராளுமன்றப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையின் அரசியல் பின்னணிகளையும், அக்காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சவால்களையும் வெளிப்படுத்தும் ஆவணத் திரைப்படமொன்று நேற்று (22.11.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை மாவடிப்பள்ளி மாவடி வாசலில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சீ.டி.என். கிரியேஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "இரட்டை குழல் துப்பாக்கி" எனும் இவ்வாவணத் திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வு, ஜென்சி ஈஸ்ட் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, அமைப்பின் செயற்பாட்டாளர் சி.எம்.யு. தாரிக் தலைமையில் நடைபெற்றது.
2002ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் தனித்துவத்தை தேசிய அரசியல் அரங்கில் வலியுறுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பாராளுமன்றப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையின் பின்னணியில் இடம்பெற்ற அரசியல் நகர்வுகள், அக்கால அரசியல் தரப்புகளின் நிலைப்பாடுகள், முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள், அப்போது கவனத்திற்கொள்ளப்படாமல் போன விடயங்கள் உள்ளிட்ட பலரும் அறிந்திராத தகவல்கள் இவ்வாவணத் திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. அன்சில் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அமீருல் அன்சார் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம். நயீம், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பஷீர், முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உமர் அலி, ஏ.ஆர். அமீர், எம். முஸ்தபா, எம்.எஸ்.எம். நவாஸ் (ஹாரீஸ்), யூ.எல். தௌபீக், எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், சட்டத்தரணிகளான முஹம்மட் சுல்பி, முஹம்மட் ரஸ்மின், திரைப்பட இயக்குநர் எல்.எம். சாஜித், ஜென்சி ஈஸ்ட் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிரேஷ்ட சட்டத்தரணிகள், ஊடகத்துறை சார்ந்தோர், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றின் முக்கியமானதொரு அத்தியாயத்தை ஆவணப்படுத்துவதுடன், அக்கால அரசியல் சூழ்நிலைகள், தீர்மானங்கள் மற்றும் அதன் பின்னணிகளை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வரலாற்றுப் பதிவாகவும் இவ்வாவணத் திரைப்படம் அமைந்துள்ளது.
நூருல் ஹுதா உமர்