New Updates! Fresh news just arrived.

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!...

News

யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!

January 28, 2026 6:50 pm
யாழ். பண்டத்தரிப்பில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டது!
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பிரதேச சபையினுடைய கொல்களம் அமைந்துள்ள குறித்த காணியானது 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினரினுடைய பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது இக்காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சுழிபுரம் பகுதியிலிருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையிலுள்ள இராணுவ முகாமிற்க்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now