துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணை!...
News
துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணை!
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடமைப்புத் தொகுதி ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்குடன் தொடர்புடைய முன்-விசாரணை மாநாடு நிறைவடைந்ததன் பின்னர், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க இன்று (23) நிர்ணயித்தார்.
அத்துடன், அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணை பிறப்பிக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.