New Updates! Fresh news just arrived.

பிரதேச சபையினால் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி; 2வது தவணை...

News

பிரதேச சபையினால் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி; 2வது தவணையில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் மூலம் விடுவிப்பு!

July 2, 2026 11:14 pm
பிரதேச சபையினால் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி; 2வது தவணையில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் மூலம் விடுவிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில், முறையான அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தியதாகக் கூறி, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட பிரதேச சபை ஒன்றின் மூலம் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரும் முகவரியும் சரியாக இருந்த போதிலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த முச்சக்கர வண்டி இலக்கம் தனக்குச் சொந்தமானது அல்ல என்றும், தான் அத்தகைய வாகனத்தை ஒருபோதும் ஓட்டியதோ அல்லது அங்கு நிறுத்தியதோ இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதன் போது, பிரதிவாதி சார்பில் சட்டத்தரணிகளான எம்.கே.எம். பர்சான் மற்றும் எம்.ஆர்.பி. ஹாதி ஆகியோர் நீதிமன்றத்தில் தமது சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.இதன் போது குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவையின் பிரிவு 186ன் கீழ் வழக்கு விளக்கத்திற்கு எடுக்கப்பட்டதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கை கொண்டு செல்ல போதிய சான்று இல்லாதபோது கௌரவ நீதிபதிக்கு குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க அதிகாரமுண்டு என்பதை நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டி நியாயமான ஆட்சேபனைகளை முன்வைத்தனர்.

அதனையடுத்து, இன்றைய இரண்டாவது வழக்கு விளக்கத்தின் போது இந்த வழக்கை மேலும் தொடர முடியாது என்பதை ஏற்றுக்கொண்ட வழக்காளியான குறித்த பிரதேச சபை வழக்கை முழுமையாக வாபஸ் பெற்றது. இதனை ஏற்றுக்கொண்ட கௌரவ நீதவான், குற்றம் சாட்டப்பட்ட நபரை குறிப்பிட்ட குற்றச்சாட்டிளிருந்து விடுவித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now