Microsoft தொழில்நுட்பக் கோளாறால் விமானப் போக்குவரத்து அதி...
News
Microsoft தொழில்நுட்பக் கோளாறால் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் மின்னஞ்சல் பாதிப்பு!
உலகளாவிய ரீதியில் மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகளுக்குத் தற்காலிகமாகத் தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.
இன்று (13) முற்பகல் முதல் தமது உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகளில் இவ்வாறான தற்காலிகத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகச் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இக்காலப்பகுதியில் விமானப் போக்குவரத்துத் துறையின் பங்காளர்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தமது அவசர விசாரணைகள் அல்லது உத்தியோகபூர்வத் தேவைகளுக்காகச் சம்பந்தப்பட்ட சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் அல்லது உத்தியோகபூர்வ நிலையான தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால் அதிகாரசபையின் ஏனைய செயற்பாடுகளுக்கோ அல்லது சேவைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அவை வழமை போன்று தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், உத்தியோகபூர்வ மின்னஞ்சல் சேவைகள் வழமைக்குத் திரும்பியவுடன் அது குறித்து மேலதிக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.