அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது!
News
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது!
அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (03) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் கூடவுவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காக ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் தொடர்பில் இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது.
இதன்படி, புதிய கணக்காய்வாளர் நாயகத்தினை தெரிவு செய்யும் பணிகளானது இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகமான டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதினை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாகவுள்ளது.
குறித்த பதவிக்கான பதில் கடமைகளினை மேற்கொள்வதற்காகக் கணக்காய்வாளர் திணைக்களத்தினுடைய சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டிருந்ததுடன், அவரது பதில் கடமைக் காலமும் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியோடு நிறைவடைந்தது.
தற்போது கணக்காய்வாளர் நாயகத்தின் பதவி வெற்றிடமாக உள்ளதோடு, ஜனாதிபதியால் பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சபைக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த பெயர்கள் அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்பட்டன.
இருந்தபோதிலும், கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காக ஜனாதிபதியால் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் அரசியலமைப்புச் சபையின் இறுதித் தீர்மானத்தினை எடுக்கவுள்ளது.
இதனிடையே, பெப்ரவரி மாதத்தினுடைய முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரைக்கும் பாராளுமன்றம் கூடவுள்ளதோடு, சுதந்திர தினம் காரணமாக நாளை (04) பாராளுமன்ற அமர்வானது நடைபெறாது எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.