New Updates! Fresh news just arrived.

மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்! ...

News

மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!

February 3, 2026 9:24 am
மின்சார சபையை கலைப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்!
இலங்கை மின்சார சபையினுடைய மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது.

இதன்படி, இந்த மாத இறுதிக்குள் இலங்கை மின்சார சபையினை கலைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையினை மறுசீரமைக்கும் பணி 5 கட்டங்களாக முன்னெடுக்கப்படுவதோடு , அவற்றில் 4 கட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.

அடிப்படை ஒதுக்கீட்டுத் திட்டம், வருடாந்த மின் கொள்முதல் திட்டம் மற்றும் நீண்ட கால மின் உற்பத்தித் திட்டம், நீண்ட கால மின் விநியோக மேம்பாட்டுத் திட்டம் போன்ற கட்டங்கள் இவ்வாறு நிறைவடைந்திருப்பதாக மின்சார சபை மாற்றத்திற்கான செயலணியினுடைய தலைவர் புபுது நிரோஷன் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், இதன் இறுதிக்கட்டமான தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் தேசிய மின்சாரக் கட்டணக் கொள்கையினை தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அதனை பெப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்திற்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் இலங்கை மின்சார சபையினை கலைப்பதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.

குறித்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், விருப்ப ஓய்வு (VRS) பெற விண்ணப்பித்தவர்களுக்கு இழப்பீடு வழங்குகின்ற நடவடிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்சார சபையினுடைய 2,173 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்ததோடு, அவர்களில் 20 பேர் தமது விண்ணப்பங்களினை மீளப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

மேலும், 2,153 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதற்க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையினை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now