ஆண்டியா புளியங்குளத்தில் “ஒற்றுமையே பலம்” தொனிப்பொருளில் ...
News
ஆண்டியா புளியங்குளத்தில் “ஒற்றுமையே பலம்” தொனிப்பொருளில் மண்ணின் முதலாவது ஹஜ் விழா- பிரதம அதிதியாக றிஷாட் பதியுதீன் பங்கேற்பு!
வவுனியா, ஆண்டியா புளியங்குளம் அல்-அரபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “ஒற்றுமையே பலம்” எனும் தொனிப்பொருளில் மண்ணின் முதலாவது ஹஜ் விழா நேற்று (31) ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன். அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் இம்தியாஸ், உதவித் தவிசாளர் ஜெகன், பிரதேச சபை உறுப்பினர் லியாகுல் ஹக், அதிபர் ஜாபிர், கட்சியின் செயற்பாட்டாளர் அமானுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேவேளை, கட்சிப் போராளிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஹஜ் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு மற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அவற்றில் வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் குழுக்களுக்கு பெறுமதியான பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
சமூக ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பிரதேச மக்களின் பரவலான வரவேற்பைப் பெற்று உற்சாகமான முறையில் நிறைவடைந்தது.