New Updates! Fresh news just arrived.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம் பெற்ற புனித பிலிப்பு...

News

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம் பெற்ற புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்!

May 17, 2026 6:46 pm
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம் பெற்ற புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் கொடியேற்றம்!
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்றம் நிகழ்வு இன்றைய தினம் மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

செம்பியன் பற்று பங்கு ஜஸ்டின் ஆதர் தலைமையில் கொடியேற்ற வழிபாடுகள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் இடம் பெற்றது

கொடியேற்ற வழிபாட்டை தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் திருச்செபமாலை ஆரம்பமானது பின்னர் திருவிழாவிற்கான நவநாள் திருப்பலியின் ஆரம்ப நாள் திருப்பலியினை வன பிதா ஜெயபாலன் அமலமரித்தியாகிகள் தலைமையில் இடம்பெற்றது

குறித்த ஆன்மீக திருப்பலியில் இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now