டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களினை மீட்க அரசாங்கம்...
News
டித்வா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களினை மீட்க அரசாங்கம் போதிய நிதியினை ஒதுக்கியுள்ளது: ஆளுநர் தெரிவிப்பு!
டித்வா புயல் இடர்பாதிப்புகளி; இருந்து மக்களினை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது போதிய நிதியினை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளினை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, இன்று செவ்வாய்க்கிழமை (27) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றிய நிலையில் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
2026ஆம் ஆண்டு வடக்கினை பொறுத்தவரையில் ஒரு 'அபிவிருத்தி ஆண்டாக' அமைய உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு அதிகளவிளான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. மாகாண சபையிக்கு கிடைக்கும் வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய அமைச்சுக்களின் மூலமாகவும் எமக்குக் கூடுதலான நிதி ஒதுக்கீடுகளானது கிடைக்கப்பெறவுள்ளன. ஒதுக்கப்பட்ட நிதிகளைளினை விட, மேலதிகத் திட்டங்களைச் சமர்ப்பிப்பதன் ஊடாக மேலும் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும், எனவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவினுடைய தலைவரும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையுரையாற்றுகையில், மத்திய மற்றும் மாகாண நிதிகளுக்கு மேலதிகமாக, இவ்வாண்டு விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாணத்தில்,அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களானது முன்னெடுக்கப்படவுள்ளன என தெரிவித்தார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்புரையாற்றுகையில், 2025 இறுதியில் ஏற்பட்டிருந்த டித்வா பேரிடர் நிவாரணப் பணிகளுக்குச் சிறப்பான அரசியல் தலைமைத்துவமும், அதிகாரிகளின்னுடைய ஒத்துழைப்பும் கிடைத்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் உரிய காலத்தில் வழங்கப்பட்டிருந்தன. 2026இல் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், மாவட்டத்தில் நிலவுகின்ற ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும், எனவும் கோரிக்கையை முன்வைத்தார்.
இக்கூட்டத்தில், வடக்கு மாகாண சபைக்கு 2026ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற மொத்த நிதியில் 20 சதவீதமானது, அதாவது 1,592 மில்லியன் ரூபாவானது முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஒதுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, 2025ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களினுடைய முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டதோடு, 2026ஆம் ஆண்டுக்கான புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பிரதேச செயலக மட்டத்தில் தீர்க்கப்பட முடியாத விடயங்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பில்லும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கூட்டத்தில் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், வடக்கு மாகாண பிரதம செயலாளரான திருமதி தனுஜா முருகேசன் மற்றும் மாகாண அமைச்சுக்களினுடைய செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின்னுடைய தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பொலிஸ், பாதுகாப்புத் தரப்பினர், சிவில் அமைப்புக்களினுடைய பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பு.கஜிந்தன்