தேவாலயத்தில் பெரிய சிலுவை சரிந்து விழுந்து அருட்தந்தை பலி...
News
தேவாலயத்தில் பெரிய சிலுவை சரிந்து விழுந்து அருட்தந்தை பலி
நேரலை ஒளிபரப்புச் செய்யப்பட்ட திருப்பலியின் போது ஈக்குவடோர் நாட்டில் , திடீரென பெரிய சிலுவை ஒன்று சரிந்து விழுந்ததில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை (17) ஆம் திகதி
ஈக்குவடோர் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில் அமைந்துள்ள 'சதா சகாய மாதா' (Our Lady of Perpetual Help) தேவாலயத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வழிபாடுகளை நடத்தி மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த போதே, தேவாலயத்தின் பங்குத் தந்தையான பாட்ரிசியோ அல்பிரேடோ சான்செஸ் மோலினாரி (Father Patricio Alfredo Sanchez Molinari), தேவாலயத்தின் பீடத்துக்குப் பின்புறம் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பாரிய சிலுவை திடீரென கழன்று அவர் மீது பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கூடிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குவாயாகில் பேராயர் கூடம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், "எங்கள் பிரியமான தந்தை பாட்ரிசியோ அல்பிரேடோ சான்செஸ் மோலினாரி இறைவனின் இல்லத்துக்குச் சென்றுள்ளார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்" எனத் தெரிவித்து அனுதாபம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.