கல்முனையில் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா!
News

உத்தம நபியின் உதய தினத்தினை முன்னிட்டு கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் கல்முனை வர்த்தகர்களுடன் இணைந்து நடாத்தும் மாபெரும் ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா கல்முனை நகரில் இன்று (26)இடம் பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக வரவேற்புரையை கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் செயலாளர் எம்.முபாரிஸ் அவர்களும் தலைமையுரையினை கல்முனை முஹ்யித்தீன் ஜும் ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் தலைவர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார் .
இதன் போது பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கல விக்ரமாரச்சி , விசேட அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், அஹ்லுல் சுன்னத்வல் ஜமாத் உலமா சபையின் தலைவர் மெளலவி பி.எம்.ஏ.ஜலீல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கல்முனை கிளை தலைவரான மெளலவி ஏ.எல்.எம்.முர்ஷித் ஆகியோரும் உலமாக்கள் மற்றும் கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்திருந்தனர்.
மேலும் இதன் போது சர்வ மத தலைவர்களின் உரை இடம் பெற்றத்துடன்,மீலாத்துன் நபி பெரு விழா விசேட மார்க்க சொற்பொழிவினை மலேசியாவில் இருந்து வருகை தந்த மெளலான அஷ்ஷேக் முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் நிகழ்த்தினார்.
குர்ஆன் மத்ரஸா மாணவரின் ஆங்கில பேச்சு முஸ்லிம் கலாசார பொல்லடி நிகழ்வு இஸ்லாமிய பைத் நிகழ்வுகள் இதன் போது இடம் பெற்றது.
மேலும், நிகழ்வின் இறுதியாக கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் கந்தூரி உணவானது வழங்கி வைக்கப்பட்டது.
(எம்.என்.எம்.அப்ராஸ்,நூருல் ஹுதா உமர்)