நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்...
News
நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.
இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண வைத்தியசாலையினுடைய சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுகளுக்கு 92 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றுகின்ற தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பு.கஜிந்தன்