New Updates! Fresh news just arrived.

விஜய் படைத்த வரலாறு

News

விஜய் படைத்த வரலாறு

July 24, 2026 8:01 am
விஜய் படைத்த வரலாறு
சுமார் 50 ஆண்டுகள் சென்ற பின்னர் தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் இப்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது விஜய் மூலமாக மீண்டும் நடைப்பெற்றுள்ளது.

நேற்று (23)ஆம் திகதி
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பல்வேறு சிக்கல்களை கடந்த நிலையிலு உலகம் முழுவதும் வெளியானது.

இப் படத்தை வரவேற்க ரசிகர்கள் பல இரவு பகலாக காத்திருந்தோடு, வெளியீட்டுக்கு முந்தைய நாளே சென்னை நகரம் முழுவதும் திருவிழாவாக மாறியது.
தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழ் சினிமாவின் நடிகருமான விஜய்யின் திரைப்பயணத்திற்கு இறுதியாக மகுடம் சூட்டும் திரைப்படமும், அத்தோடு அவரது கடைசித் திரைப்படமாகவும் இது வெளியாகியுள்ளது.

நேற்று வெளியாகியுள்ள திரைப்படத்தை கடந்த 22 ஆம் திகதி இரவு முதலே கொண்டாடத் தொடங்கிய விஜய்யின் ரசிகர்கள், சென்னையின் முக்கிய திரையரங்குகளை உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றதுடன், இரவு நேரம் என்பதையே மறக்கடிக்கும் வகையில் ரசிகர்களின் ஆரவாரம், ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டம் என திரையரங்குகள் முன்பு திருவிழா சூழல் நிலவியது.

அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கியதோடு தமிழக முதலமைச்சரான நடிகர் விஜய், தனது திரைப்பயணத்தை 'ஜனநாயகன்' திரைப்படத்தோடு நிறைவு செய்கிறார் என்பதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உச்சத்தையும்,எதிர்பார்ப்பையும் எட்டியுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இதன் வெளியீட்டை திருவிழாவாகவே கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுகள் கடந்த நிலையில்
இப்போது விஜய் மூலமாக ஒரு நடிகரின் திரைப்படம் வெளியாவது மீண்டும் தற்போது நிகழ்ந்துள்ளது. இதனிடையே, தமிழக அரசியலிலும் சினிமாத்துறையிலும் எம்.ஜி.ஆருக்குப் பிறகு வெளியான திரைப்படமாகும்.

எம்.ஜி.ஆர் 1977 ஆம் வருடம் முதலமைச்சராகப் பதவியேற்றதோடு, அவர் நடிப்பில் உருவான (1977 அக்டோபர்) 'மீனவ நண்பன்' மற்றும் (1978) 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகியது.

அதேபோல், தற்போதைய தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now